இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த 25ஆவது படம் ‘ஜப்பான்’. இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தநிலையில், இந்த படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது 25ஆவது படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் ரூ.1 கோடி வரை உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளதாக நடிகர் கார்த்தி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி படம் வெளியான போது அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.
இந்த நிலையில் தன்னார்வலர்கள் 25 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் நடிகர் கார்த்தி வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கு உள்ளது. ஆனால் யார் மூலமாக உதவுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் பலரிடம் பணம் இருக்கிறது, ஆனால் உதவ அவர்களுக்கு நேரமில்லை.
அப்படி தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் தன்னார்வலர்கள் இங்கே நிறைய பேர் இருக்கின்றனர்.
இதன்மூலம் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, உதவி செய்ய மனம் படைத்த வசதியானவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரியவரும். இந்த பணி இன்னும் தொடரும்’ என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யூடியூப் டிரெண்டிங்கில் No 6: ‘Mr.Zoo Keeper’ டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு..!