‘Actor Karthi’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத நிலையில் மிகவும் கவணத்துடன் நடித்து வருகிறார்.
தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருக்கும் கார்த்திக்கு பின்னால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது நடிகர் கார்த்தி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘கார்த்தி 26’ என்று அழைக்கப்படும் படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார்.
‘கார்த்தி 27’ என்று அழைக்கப்படும் படத்தை ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்குகிறார். இந்த ‘கார்த்தி 27’ படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், தற்போது நடிகர் கார்த்தி ஒரு வில்லாவை திறந்து வைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னைக்கு அருகே இயற்கையாக உருவாக்கியுள்ள ‘லா வில்லா’-வை நடிகர் கார்த்தி இன்று திறந்து வைத்தார். அந்த வில்லா அமைதியான சூழல், ஆரோக்கியமான இருப்பிடம்,கிராமத்து உணவு, பம்பு செட்டு குளியல் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன.