ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்..! செல்பி எடுத்த நடிகர் கார்த்தி..!

0
74

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத நிலையில் மிகவும் கவணத்துடன் நடித்து வருகிறார்.

தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருக்கும் கார்த்திக்கு பின்னல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ தீபாவளிக்கு வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘கார்த்தி 26’ என்று அழைக்கப்படும் படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். ‘கார்த்தி 27’ என்று அழைக்கப்படும் படத்தை ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்குகிறார்.

‘கார்த்தி 27’ படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின் போது கார்த்தியைக் காண ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனைக் கண்ட நடிகர் கார்த்தி அவர்களைச் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்தி நடித்து இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியே இல்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இருப்பதால் அதனை செட் போட்டு எடுக்காமல் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை ரியலாக ஷூட் செய்து வந்ததாக படத்தின் இயக்குநர் பிரேம்குமார் கூறுகிறார். கிராமத்து மண் வாசனையுடன் உருவாகும் இந்த படம் மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘புளூ ஸ்டார்’ வெற்றியை கொண்டாடிய பா.ரஞ்சித்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here