கவின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்..! கதாநாயகி யார் தெரியுமா.?

0
140

‘Kavin’: தனியார் தொலைக்காட்சியில் ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி பகுதி 2’, ‘தாயுமானவன்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் கவின். இவர் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு பிக்பாஸ்-ல் கலந்துகொண்ட நிலையில் மக்கள் மனதில் இடம் பித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிப் பிறகு ‘லிப்ட்’ என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் மக்கள் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படம் ‘டாடா’. இந்தப் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் கதை கூற ஆரம்பித்தனர்.

நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்ட கவின் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகினார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கவின் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கவின் அடுத்ததாக இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவரும், கவினின் நண்பருமான நபரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தின் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here