கவின் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் என்ன..!

0
154

Actor Kavin: தனியார் தொலைக்காட்சியில் ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி பகுதி 2’, ‘தாயுமானவன்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் கவின். இவர் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பிறகு பிக்பாஸ்-ல் கலந்துகொண்ட நிலையில் மக்கள் மனதில் இடம் பித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிப் பிறகு ‘லிப்ட்’ என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் மக்கள் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படம் ‘டாடா’. இந்தப் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் கதை கூற ஆரம்பித்தனர்.

நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்ட கவின் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகினார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த ஸ்டார் படத்தை தொடர்ந்து நடிகர் கவின், இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ‘கிஸ்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் நெல்சனில் உதவி இயக்குநரான சிவபாலன் இயக்கத்தில் கவின் தனது 6ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு 46 நாட்கள் நடந்து முடிந்ததாகவும் அடுத்தக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, கவினின் 7ஆவது படம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here