‘Actor Kishore’: உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக அணிவகுத்து சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்து தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. நியாயமான விலை கேட்பது அநியாயமா?
MSP உத்தரவாதம் கொடுத்து ஆட்சிக்கு வந்த தந்திர புடாரியை விட்டு அதே விவசாயிகள் பயிரிட்ட சோற்றை தின்று வாழ்வோம் அந்த விவசாயிகளை தேச துரோகிகள் என கருதி சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது.
அனைத்தையும் செய்தது மோடியின் அரசு தான். ஆனால், நாடு முழுவதும் உணவு வழங்கும் விவசாயிகளின் தலையில் துரோக முத்திரை குத்தப்பட்டுள்ளது. மதவெறி பிடித்த கூட்டம் ஒன்று விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறது.
ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய காவல் துறையினருக்கும் உணவு கொடுத்த நம் விவசாயிகள் கருணையாளர்களல்லவா?” என பதிவு செய்துள்ளார்.