கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைத்து நடிகர்கள், நடிகைகள் என திரைத்துறையினர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, நான் செயற்குழு உறுப்பினராக இணைந்து பணியாற்றினேன். அப்போது என்னிடம் சங்கத்தின் பத்திரத்தை எல்லாம் காண்பித்தார்.
இப்போது நடிகர் சங்க கட்டடத்தை கடன் வாங்கி கட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றது போல அனைத்து நடிகர்களையும் அழைத்து விருந்தளித்து, உபசரித்து மொய் விருந்து போன்று வைத்து பணம் வசூலிப்போம்.
அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அளிக்கட்டும். விஷால், நாசர் உங்களுக்கு சக்தி இருக்கிறது. இனி நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். கேப்டன் வளாகத்தில் ஆண்டு தோறும் கேப்டன் பெயரில் பொங்கல் விழா நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்த்திபன் இயக்கத்தில் புதிய படம்..! டைட்டிலை வெளியிட்ட படக்குழு..!