‘விஜய்யை பார்த்து நான் ஏன் பதுங்க வேண்டும்?’ – மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம்!

0
94

நடிகர் மன்சூர் அலிகான் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் தற்போது அந்த கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் நான் ஓடிப்போய் பதுங்கிக் கொள்ள வேண்டுமா..? அவர் தற்போது ‘கோட்’ படத்தில் தானே நடிக்கிறார். கோட் என்றால் ஆடு தானே. பிரியாணி போட்டுவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாளைக்கு அவர் கட்சி தொடங்குகிறார், இவர் கட்சி தொடங்குகிறார் என்பதை பற்றியெல்லாம் எங்களுக்கு பயம் இல்லை. எங்களுடைய கட்சியின் கொள்கைகள்தான் எங்களுக்கு முக்கியம்” என தெரிவித்தார்.

அவரின் இந்த பேச்சு அப்போது சர்ச்சையை ஏற்பாடுத்திய நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் மன்சூர் அலி கானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here