இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஜன.25) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த நிலையில் அவரது உடல் சென்னையில் இருந்து இன்று மாலை சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
பின்னர் அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைப்பிரலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்தவதற்காக அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், பவதாரிணி சிறு வயதில் அழுதுகொண்டே பாடல் பாடிக்கொண்டிருக்கும் பொழுது அவரை இளையராஜா தேற்றும் வீடியோ ஒன்றை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவிற்கு ரீ ட்விட் செய்த நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ‘மகள் அழுகையில் தேற்றிய தந்தையை தேற்றிட மகள் ஏனோ இன்றில்லையே. பற்றினைப் பற்றிட பற்றிடும் சோகத்தீயை அனைத்திட ஏதுமுளதோ? இப்பூமியில்…!” என குறிப்பிட்டுள்ளார்.