‘ஏதோ படமே ரிலீஸானது போல மகிழ்ச்சி’- ‘TEENZ’ பர்ஸ்ட் லுக் குறித்து பார்த்திபன் ட்வீட்..!

0
95

‘Director Parthiban’: இயக்குநரரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவரது கடைசி படைப்பான ‘இரவின் நிழல்’ திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.

அந்த வகையில், நான் லீனியர் திரைக்கதை முறையில் உலகின் முதல் படம் என்ற பெருமையை ‘இரவின் நிழல்’ படம் பெற்றது. இந்த படத்திற்காக பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது பார்த்திபன், புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு ‘டீன்ஸ்’ (Teenz) என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் குறித்த வீடியோ வெளியாகிய நிலையில் அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து இயக்குநர் பார்த்திபர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “முதல் பார்வையிலேயே பத்திகிட்ட காதல் போல ‘First look’ theatre -ல!!! பரவசம் பத்திகிச்சி. ஏதோ படமே ரிலீஸாகி பட்டைய கிளப்பினதுப் போல மகிழ்ச்சி! பொண்ணைக் காட்றேன்னு கூட்டிகிட்டு போயி பொண்ணையும் காட்டல அவ போட்டோவையும் காட்டல, கட்ன புடவையையும் காட்டல.

அவ சிரிப்போட இடைவெளியில சிந்துன ஒரு சொட்டு புன்னகையைய மட்டும் காட்டி, ஒரு மொட்டே இவ்வளவு அழகுன்னா, அது பூவா விரிஞ்சி மாலையா தொடுத்து தோளை அலங்கரிச்சா எப்படி இருக்கும்? அந்த வேளையத் தான் ஈடுபாட்டோட பண்ணிகிட்டிருக்கேன். First look-க்குக் கிடைச்ச வரவேற்புத் தெம்போட ‘TEENZ’..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு புறப்பட்ட ரஜினிகாந்த்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here