‘Actor Prabhas’: பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.
இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், தற்போது பிரபாஸ் உடல் நிலை குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரபாஸ் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட வலி இன்னும் சரியாகாத நிலையில், அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், சில நாட்கள் ஓய்வெடுக்கும் முடிவில் பிரபாஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் லண்டனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது ஓய்வு நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அவர் தங்கும் அந்த வீட்டிற்கு மட்டும் வாடகைக்கு மாதம் ரூ.60 லட்சம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு, தொடர்ந்து ‘ராஜாசாப்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.