பாஜகவில் இணையும் பிரகாஷ் ராஜ்?.. வதந்திக்கு நச் பதில்..!

0
113

Prakash Raj: பாஜக மற்றும் பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பாஜக-வில் இணையவுள்ளதாக என தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ‘தி ஸ்கின் டாக்டர்’ என்ற ஐடியில் இன்று மதியம் 3 மணிக்கு பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணைய இருக்கிறார் என்று ட்வீட் செய்திருந்தது. இது குறித்து அந்த பதிவில்,’அவர்களது சித்தாந்தங்களை வைத்து என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டையே நடிகர் பிரகாஷ் ராஜ் கொண்டிருக்கிறார்.

பல்வேறு இடங்களில் இதனை பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பேசி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here