இளம்பெண்ணை காதலிக்கும் பிரேம்ஜி..! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?..

0
101

‘Happy Marriage Life’: பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. இவர் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நயன்தாராவின் நண்பராக அந்த படத்தில் நடித்திருப்பார். ஆனால் அந்தப் படத்தில் அவருக்கு ஒரு ரீச் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரேம்ஜிக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, சத்தம் போடாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர், தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு என தொடர்ந்து தனது அண்ணன் இயக்கும் படங்களில் நடித்தார். இப்படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தன.

தற்போது தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் ‘The Greatest of all time’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேம்ஜி ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையயும் அமைத்துள்ளார்.

பிரேம்ஜிக்கு 44 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஒரு பேச்சுளராக கூறி வந்தார். தொடர்ந்து பல இடங்களில் ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் என கேட்டு வந்தனர். அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தற்போது பிரேம்ஜி ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார்.

புத்தாண்டு அன்று தனது சமூக வலைத்தளத்தில், புத்தாண்டு வாழ்த்து கூறிய அவர், தனக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல், வெளியாகியுள்ளது, பிரேம்ஜி ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், பிரேம்ஜிக்கு நடைபெறவிருப்பது காதல் திருமணம் என கூறி வருகின்றனர். மேலும், பிரேம்ஜியின் காதலி 24 வயதுடையவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதனையறிந்த நெட்டிசன்கள் சிலர் தன்னைவிட 20 வயது குறைவான இளம்பெண்ணை பிரேம்ஜி காதலித்து வருவதாக கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் காதலுக்கு கண் இல்லை, வயது இல்லை என பிரேம்ஜியின் காதலுக்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து ‘Happy Marriage Life’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..! இந்தாண்டு விஜய்யின் 3 படங்கள் ரிலீஸ்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here