கேப்டன் விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நடிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் புகழ் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நான் விஜயகாந்த் ஐயாவோட இறப்புக்கு வந்திருந்தேன். திரும்பவும் இப்போ வந்ததற்கு என்ன காரணம் என்றால், விஜயகாந்த் ஐயா பசி என்று வந்தவர்களுக்கு எப்படி சாப்பாடு போட்டாரோ. அதேபோல இன்று முதல் நான் என்னோட கே.கே.நகரில் உள்ள அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு மதியம் சாப்பாடு கொடுக்கவுள்ளேன்.
அதற்கு ஆசிர்வாதம் வாங்குவதற்காகதான் இங்கே மீண்டும் வந்திருக்கிறேன். ஏனென்றால் நான் சென்னை வந்தபோது பல நாட்கள் பசியோடு இருந்திருக்கிறேன். அந்த அவதி இனி யாருக்கும் வரக்கூடாது என்னால் முடிந்த அளவிற்கு அனைவரது பசியையும் போக்கவுள்ளேன்.
கேப்டன் ஐயா செய்தது போல நானும் இன்று முதல் மக்களின் பசியை போக்கவுள்ளேன். நீங்களும் உங்களிடம் யாராவது பசி என்று வந்தால் சாப்பாடு வாங்கி கொடுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..! என்ன காரணம்?..