Raghava Lawrence: திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு என்னும் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறை வசதி செய்துதரும்படி ஊர்மக்கள் பல முறை அரசிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அரசு இதுவரை எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.
இதனால், அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி நடிகர் KPY பாலாவிடம் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு கழிவறை வசதி செய்து தரும்படி மனு வழங்கியுள்ளனர்.
இந்த மனுவை பெற்ற பாலா, இதற்கான பணத்தை சேர்க்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். கடைசிவரை அவரால் 5 லட்சம் ரூபாய் மட்டும் சேர்க்க முடிந்தது. இன்னும் 3 லட்சம் ரூபாய் சேர்த்துவிட்டு பள்ளிக்கு சிமெண்ட் சீட் கொண்ட கழிவரை கட்ட முடிவு செய்துள்ளார்.
ஆனால், அவரிடம் 3 லட்சம் ரூபாய் குறைவாக இருந்ததால், உடனடியாக நடிகர் ராகவா லாரன்ஸை தொடர்புகொண்டு 3 லட்சம் ரூபாய் இருந்தால், பள்ளியில் கழிவரை கட்ட வசதியாக இருக்கும் என கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட லாரன்ஸ் உடனடியாக மொத்த தேவையான 15 லட்சம் ரூபாயும் தருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பேரில், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு லாரன்ஸும், பாலாவும் நேரில் சென்றனர்.
அங்கு, சிதலமடைந்து இருந்த கழிவறையை ஆய்வு செய்தனர். பின்னர், அங்கிருந்தவர்களிடம் ஆலோசித்துவிட்டு கழிவறைக்கு தேவையான செலவுகளை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டார்.
அப்போது பாலா குறித்து பேசிய லாரன்ஸ், “ பாலா நல்ல பையன், இதுவரை யாரிடம் காசு கேட்காமல் தனது சொந்த செலவில் அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறார்.
இனிமேல் பாலா கொடுக்கும் ஒவ்வொரு சைக்கிள், பைக்கிளும் லாரன்ஸ் பெயர் இருக்கும், அதேபோல் நான் செய்யும் அனைத்து விஷயங்களிலும் பாலா என்னுடன் இருப்பார், நான் எப்பவும் பாலாவுடன் இருப்பேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.