ரசிகர்களை தேடிச்சென்று சந்தித்த லாரன்ஸ்..!

0
172

‘Raghava Lawrence’: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து பட நடிகர்களுக்கும் நடினம் பயிற்றாளராக இருந்திருக்கிறார்.

இவர், முதன்முதலில் தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாண்டி, முனி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

தொடர்ந்து, லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படங்கள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜிகிர்தன்டா பாகம் இரண்டு மாபெரும் வெற்றிப்பெற்றது.

ராகவா லாரன்ஸ் அடிக்கடி தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார். அந்த வகையில் ஒரு நாள் லாரன்ஸை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சோக சம்பவம் நடந்த நிலையில், ‘என்னை தேடி ரசிகர்கள் வரவேண்டாம், நானே உங்களை தேடி வருகிறேன்’ என கூறியிருந்தார். அதன்படி, நடிகர் லாரன்ஸ் விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்று தனது ரசிகர்களைச் சந்தித்தார்.

அங்கு, ரசிகர்களிடம் உரையாற்றிய லாரன்ஸ் தொடர்ந்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here