ராம் சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

0
95

Actor Ram Charan: நடிகர் ராம் சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

மேலும், இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தற்காலிகமாக இந்த படத்திற்கு ‘RC16’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை புச்சி பாபு இயக்கவுள்ளதாகவும், ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக படக்குழு தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கத்ரீனாவுடன் நடித்தது நம்பமுடியாத ஒரு விஷயம்’ – விஜய் சேதுபதி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here