‘Actor Rituraj Singh’: பிரபல ஹிந்தி சின்னத்திரை நடிகர் ரிதுராஜ் சிங் (59) மாரடைப்பால் காலமானார். அவரது மரணத்தை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான அமித் பெஹல் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இவரது மறைவுக்கு சின்னத்திரை மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரிதுராஜ் சிங் முன்னதாக நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான ரித்துராஜ் சிங். பல்வேறு பாலிவுட் படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சமீபகாலமாக அவர் கணைய அழற்சி (Pancreatic disease) காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இவரது உடலுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.