‘நானும் அரசியல்வாதி தான்’ – ஆர்.ஜே.பாலாஜி..!

0
106

‘Actor RJ Balaji’: ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையைத் தொடங்கி காமெடி நடிகர், கதாநாயகர், இயக்குநர் என தொடர்ந்து சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்திய பேட்டியில், “தேர்தலில் நிற்பதும், அதற்காக பரப்புரை செய்வதும் மட்டுமே அரசியல் என்றால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். ஒரு தெருவில் தேவையில்லாமல் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், அதை தடுக்க நீங்கள் குரல் கொடுத்தால் நீங்களும் அரசியல்வாதிதான்.

ஒரு ஏழையின் குழந்தைக்கு பள்ளி கட்டணம் கட்டினோம் என்றால் நாமும் அரசியல்வாதிதான். அந்த அரசியலை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன், எப்போதும் செய்வேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here