ஒரே நேரத்தில் இரு மொழிகளில் நடிக்கும் சமுத்திரக்கனி – வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

0
131

தமிழ், தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வருபவர் சமுத்திரக்கனி. இவர், தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , பிருத்வி போலவரபு தயாரிப்பில் இந்தப் படம் உருவாகுகிறது.

இந்த படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்கிறார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ராமம் ராகவம்’ படம் அப்பா மகன் உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்டரில் சமுத்திரகனி மற்றும் தன்ராஜ் கொரனானி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

இதையும் படிங்க: வைரலாகும் அயலா அயலா ப்ரோமோ வீடியோ..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here