ஊருக்கே அட்வைஸ் பண்ணவருக்கு வந்த சோதனை.. ! அரசியல் தான் காரணம்?..

0
132

Actor Samuthirakani: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல கட்சி வேட்பாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பல சினிமா பிரபலங்கள் மறைமுகமாக யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும், சிலர் வெளிப்படையாகவே கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இது தான் தற்போது அவருக்குப் பெரிய பிரச்சினையாக வந்து முடிந்துள்ளது.

சு.வெங்கடேசன் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் திமுக கூட்டணியில் தான் போட்டியிடுகிறார். அதை வைத்து, சமுத்திரகனி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பேசி வருகின்றனர். மேலும், அவர் காஞ்சி சங்கர மடத்தில் கைகட்டி நின்ற போட்டோ, வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

பொதுவாக சிலருக்கு அட்வைஸ் செய்தால், ‘நீ என்ன சமுத்திரகனியா?’ என கேட்கும் அளவிற்கு மக்கள் மனதில் நல்ல பெயர் வாங்கியுள்ள சமுத்திரகனி, இந்த அரசியல் பேச்சால் அவரது பெயர் டேமேஜ் ஆக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here