‘இதெல்லாம் படத்திற்கான ப்ரோமோஷன் தான்’ – பெரியார் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சந்தானம்..!

0
156

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், வரும் ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என்ற வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் பெரியாரைத் தான் குறிவைத்து பேசினார் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இது குறித்து நடிகர் சந்தானம், வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய நடிகர் சந்தானம், ‘நான் இரண்டு இயக்குநர்கள் படத்தில் கேள்வி கேட்காமல் நடிப்பேன். ஒருவர் பிரேம் ஆனந்த், இன்னொறுவர் கார்த்தி யோகி.

காரணம் அவர்களுடைய படத்தில் ஹியூமர் அவ்வளவு இருக்கும். இந்த படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு பிறகு எனக்கு ஒரு மற்றொரு ஹிட் தேவைப்படுகிறது. அது கார்த்திக் மூலம் கிடைக்க இருப்பது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.

படத்தில் ஒரு விஷயம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அப்போது நான் தயாரிப்பாளிடம், எதற்கும் பயப்பட வேண்டாம். இதெல்லாம் படத்திற்கான ப்ரோமோஷன் என நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஏனென்றால், படத்தில் எந்த தவறான விஷயமும் கிடையாது.

ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது.

இந்த படத்தில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால் நானும் இயக்குநரும் கவுண்டமணி சாரின் ரசிகர்கள். டிக்கிலோனா அவருடைய டயலாக். அப்படித்தான் வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் வசனம்.

நான் சினிமாவுக்கு வந்த நோக்கம் மக்களாகிய உங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான். கடவுளுக்கு தெரியும் காசு பணத்தை நோக்கி போக வேண்டி இருந்தால் போயிருப்பேன். அடுத்து புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்பது தான் எனது ஆசை” என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here