இயக்குநர் வெங்கி இயக்கத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ள படம் ‘வித்தைக்காரன்’. இதில், சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த ‘வித்தைக்காரன்’ திரைப்படம் இன்று உலகவில் ரிலீஸாகியுள்ளது. இந்தநிலையில், இது குறித்து நடிகர் சதீஷ் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இதனைப் பார்த்த நடிகர் வைபவ், ‘வித்தைக்காரன்’ படம் வெற்றிபெற வாழ்த்துவதாக கூறி பதிவு வெளியிட்டார். உடனடியாக இந்த பதிவைப் பார்த்த நடிகர் சதீஷ், ‘ப்ரோ உங்களது ரணம் படத்திற்கு வாழ்த்துகள்’ என மறுபதிவு செய்துள்ளார்.
நடிகர் வைபவ் தற்போது ஷெரிஃப் இயக்கத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து கூறி சதீஷ் பதிவிட்டுள்ளார்.
ஒருவருக்கொருவர் மாறி மாறி வாழ்த்து கூறிய இவர்களது பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.