அஸ்வத்தாமன் கதையில் நடிக்கும் ஷாஹித் கபூர்..!

0
148

Actor Shahid kapoor: இயக்குநர் சச்சின் ரவி இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ள படம ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’. இந்த படத்தை பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்திஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பாக உருவாகி வருகிறது.

இந்த படம், மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது. தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார்.

கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here