‘வெற்றி என்ற வார்த்தையை சொல்ல 5,600 நாட்கள் காத்திருந்தேன்’ – நடிகர் சாந்தனு..!

0
107

‘Blue Star’: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜன.25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகர் சாந்தனு தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நடிக்க தொடங்கியதில் இருந்து வெற்றி என்ற வார்த்தையை சொல்ல 15 ஆண்டுகள், 4 மாதங்கள் அதாவது 5ஆயிரத்து 600 நாட்கள் காத்திருந்தேன். இது அனைத்திற்கும் காரணம் நீங்கள்தான் மக்களே.

உங்களின் அளவு கடந்த அன்பு மற்றும் அதரவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் என்னை நிற்காமல் ஓட வைத்தது. இதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். ‘புளூ ஸ்டார்’ படம் எனக்கு சிறப்பானது. நீங்கள்தான் இதனை எனக்கு சிறப்பாக மாற்றிக் கொடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றி.. ‘புளூ ஸ்டார்’ படம் வெற்றிநடை போடுகிறது” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here