‘என் அப்பா தான் என் முதல் ஹீரோ’ – நடிகர் சாந்தனு..!

0
94

இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜன.25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக, நடிகர் சாந்தனு தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் நடிக்க தொடங்கியதில் இருந்து வெற்றி என்ற வார்த்தையை சொல்ல 15 ஆண்டுகள், 4 மாதங்கள் அதாவது 5ஆயிரத்து 600 நாட்கள் காத்திருந்தேன். இது அனைத்திற்கும் காரணம் நீங்கள்தான் மக்களே.. நன்றி..” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சாந்தனு, தனது தந்தை, அகோக் செல்வன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து, அந்த பதிவில் அவர், ‘என் அப்பா.. என் முதல் ஹீரோ! மக்களே… என் தந்தையை இதயத்தின் ஆழத்திலிருந்து சிரிக்க வைத்ததற்கு நன்றி. புளூ ஸ்டார் படத்திற்கான உங்களது வரவேற்பிற்கும், ஆதரவுக்கும், வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது எப்போதும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘பிக் பாஸ் சனம் செட்டியின் டீப் பேக் வீடியோ’..! போலீசில் புகார்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here