‘என்னை விட நூறு மடங்கு ஏக்கத்தில் இருந்தவர்கள் எனது பெற்றோர்’ – நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி!

0
123

Actor Shanthnu: இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புளூ ஸ்டார்’. இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜன.25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தனு பேசியதாவது, “இந்த மேடையில் இருப்பது எனக்கு கனவு மாதிரி இருக்கிறது. இந்த படம் எனக்கு நிறைய பரிசுகள் கொடுத்தது.

இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இது ‘புளூ ஸ்டார்’ எனக்கு கொடுத்த பரிசு. இந்த படம் சினிமா பற்றிய பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. இது எல்லாம் தாண்டி என் அப்பா அம்மாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்தேன்.

நான் எவ்வளவு ஏக்கத்தில் இருந்தேனோ அதை விட நூறு மடங்கு ஏக்கத்தில் என் பெற்றோர் இருந்தார்கள். அதற்கு ‘புளூ ஸ்டார்’ எனக்கு கொடுத்த பரிசு” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here