கதை தேர்வில் கவனம் செலுத்தும் சித்தார்த்.. அடுத்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

0
100

Actor Siddharth: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் ‘இடாகி’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்று வைத்து தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சித்தப்பாவின் உணர்வுபூர்வமான பாசத்தை இந்தத் திரைப்படம் வெளிப்படுத்தியது.

தற்போது கமல் உடன் சேர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘சித்தா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது புதிய படங்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here