Siddharth Viral Video: ‘காதலிக்க கத்துக்கோங்க, வாழறதுக்கு காதலிங்க’ – சித்தார்த்!

0
133

Actor Siddharth Viral Video: தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். கடந்த சில ஆண்டுகளாக சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகாசமுத்திரம் என்ற படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பின் இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். முன்னதாக அதிதியின் பிறந்தநாள் அன்று “பிறந்தநாள் வாழ்த்துகள் பார்ட்னர்” என சித்தார்த் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, புத்தாண்டன்றும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இருவரும் பகிர்ந்திருந்தனர். ஆனால், வெளிப்படையாக இருவரும் காதலிப்பதாக இன்று வரை கூறவில்லை. இந்த நிலையில் தற்போது “காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்” என நடிகர் சித்தார்த் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தனது செல்ல நாயான நோரிக்கு மாறி மாறி முத்தம் கொடுக்கும் சித்தார்த், ‘காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், காதல் நீங்கள் வாழ் கற்றுக்கொடுக்கும், உங்களுக்கு உதவும், வாழ்வதற்காக காதலியுங்கள், காதல் தான் வாழ்க்கையில் எல்லாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here