கேப்டன் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்திய சிம்பு..!

0
115

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா துறையினர், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது வரை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு ஜனவரி 19ஆம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் இறப்பின்போது நடிகர் சிம்பு வெளிநாட்டில் இருந்ததால் இறுதிச் சடங்கள் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால், அவர் தனது தந்தையை கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக டி.ஆர்.ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் நேராக கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று விஜயகாந்த்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இளையராஜாவின் மகள் பவதாரிணியின் இறுதிச் சடங்கிலும் அவர் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here