சிம்பு பண்றது சுத்தமா பிடிக்கல.. ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்..!

0
167

Actor Simbu: இயக்குநர் மணிரத்னம் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த ‘தக்லைப்’ படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டார். அவரது கால்ஷுட்டில் பிரச்சனை இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக தான் சிம்பு கமிட்டாகி இருந்தார். சிம்பு இந்த படத்தில் இணைந்துள்ளதை அறிந்ததும் ஜெயம் ரவி இந்த படத்தில் விலகுவதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு சிம்புவின் ஆட்டிட்யூட் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

பல நாட்களாக சினிமாவை விட்டு காணாமல் போன சிம்பு சமீப காலமாக தான் தொடர்ந்து பல படங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சிம்பு ஆட்டிட்யூட் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here