‘சிம்பு – வரலட்சுமியின் திருமணம் உண்மையா?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிம்பு..!

0
79

Actor Silambarasan: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. சிறு வயது முதலே சினிமா துறையில் இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சிம்பு இடையில் உடல் எடை அதிகரிப்பு காரணமாகவும், அவர் மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாகவும் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

இந்த நிலையில், மாநாடு படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த சிம்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் திருமண வாழ்க்கை எப்போது தொடங்கும் என அவ்வப்போது ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வந்ந்தனர். மேலும், சிம்புவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என அவரது ரசிகர்கள் கோவிகளில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்புவும் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக திடீரென புதிய வதந்தி கிளம்பியது. மேலும், இருவரும் கலை குடும்பத்து வாரிசு என்பதாலும், சரத்குமாரும், டி.ராஜேந்தரும் நண்பர்கள் என்பதாலும் இது உண்மையாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது.

மேலும், வரலட்சுமியின் முதல் படமான ‘போடா போடி’ படம் சிம்புவுடன் நடித்திருந்ததாலும் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என கூறி வந்தனர். இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து சிம்பு தரப்பில் கூறுகையில், “நானும் வரலட்சுமியும் நல்ல நண்பர்கள் மட்டுமே. நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை” என கூறப்பட்டது.

அதேபோல், “சிம்புவுக்கும், எனக்கும் திருமணம் இல்லை. அவர் என் நண்பர்” என வரலட்சுமி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருமணம் குறித்து நடிகர் சிம்பு தனது பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த சர்ச்சை பெரிதும் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here