Malika Rajput: உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான் பூரைச் சேர்ந்தவர் பிரபல பாடகியும் நடிகையுமான மலிகா ராஜ்புத் என்ற விஜய லட்சுமி. இவர் இன்று (பிப்.13) சந்தேகத்திற்கிடமான முறையில் கோட்வாலி நகர் சீதகுண்ட் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வீட்டில் உள்ள அறை கிடந்த மலிகா ராஜ்புத் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக இது குறித்து மலிகா ராஜ்புத்தின் தாயார் சுமித்ரா சிங்கிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், “வீட்டின் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் விளக்குகள் மட்டும் எரிந்துள்ளது.
அப்போது நாங்கள் கதவைத் திறக்க முயற்சிகள் செய்தோம், ஆனால் முடியவில்லை. கடைசியாக நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். அப்போது அவள் தூக்கிட்டு தற்கொலை செய்தபடி நின்றிருந்தாள். உடனடியாக என் கணவருக்கும் மற்றவர்களுக்கும் தகவல் கூறினேன்” என்றார்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது, ‘மலிகா ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் கூறப்படுகிறது. இருப்பினும், உடற்கூராய்வுக்குப் பிறகு இறுதி முடிவுகள் எட்டப்படும். எந்தவொரு சட்ட நடவடிக்கைகளும் அந்த அறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும்” என்றனர்.