SJ Suryah: யாத சத்யநாராயணா இயக்கத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ் மற்றும் நடிகை வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரஸாக்கர்’. இந்த படத்தை கூடூர் நாராயண ரெட்டி தயாரித்துள்ளார்.
தெலங்கானா மாநித்தில் 1948ஆம் ஆண்டில் நடந்த ஐதராபாத் விடுதலை இயக்கம் குறித்த நிகழ்வின் அடிப்படையில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகரும் இயக்குநருமான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா தனது உடல்நலம் குறித்து ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம்பி வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக என்னால் உங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிய்வில்லை.
இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். மன்னித்துக்கொள் தம்பி. டிரைலர் வெளியீட்டிற்கு எனது வாழ்த்துகள், ரஸாக்கர் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.