Actor SJ Suryah: சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை சிபு தமின்ஸ் தயாராகின்றார். இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ‘மெர்சல்’, ‘மாநாடு’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் வில்லனாக நடித்த நிலையில் மீண்டும் இவர் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
மேலும் முதன்முறையாக எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் மூலம் விக்ரம் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யா ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’, ‘தனுஷ் 50’, ‘எல்ஐசி’, ராஜூ முருகன் இயக்கும் படம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.