சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை, ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம். மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்.
ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்னச்சத்திரமா இருந்தது. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும்.
கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘கேப்டன் இறந்தாலும் அவர் செய்த தானம் தர்மம் நிலைத்திருக்கும்’ – யோகி பாபு இரங்கல்!