வாக்களிக்க முடியவில்லை.. ஏமாற்றமடைந்த நடிகர் சூரி..

0
90

Actor Soori: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர், அந்த வகையில், முதல் ஆளாக நடிகர் அஜித் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், கமல், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், சசிகுமார், யோகி பாபு உள்ளிட்டோரும், நடிகைகள் திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோரும் தங்களது வாக்கினை செலுத்துவிட்டுச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் சென்னை நீலாங்கரை புனித தோமையார்மலை ஊ.ஒ. பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வாக்களித்தார். அதன் பிறகு சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஷால் வாக்களித்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூரி வாக்கு செலுத்த முடியாமல் போனதாக கூறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here