மிரட்டலான ‘கருடன்’ ஃபஸ்ட் லுக் போஸ்டர்.. மாஸ் லுக்கில் சூரி..

0
136

நடிகர் சூரி விடுதலை, கொட்டுகாளி ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கருடன்’. இந்தப் படமானது வெற்றிமாறன் கதையில், துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படம் கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்னர், ‘கருடன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமுத்திரக்கனி தனது சமூல வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் இன்று ‘கருடன்’ படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் கதை என்பதால் இந்த படத்திற்கு இன்னும் ஹைப் அதிகமாகியுள்ளது. மேலும், ‘கருடன்’ வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ‘வெரி ஸ்வீட்’.. ‘மிகச் சிறந்த நடிகை’.. – ‘ஹிட்லர்’ பட நாயகியை பாராட்டிய விஜய் ஆண்டனி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here