சூரி நடிக்கும் ‘கருடன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
109

Actor Soori: காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர் சூரி விடுதலை, கொட்டுகாளி ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கருடன்’. இந்தப் படமானது வெற்றிமாறன் கதையில், துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படம் கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது ‘கருடன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக சமுத்திரக்கனி சமீபத்தில் தனது சமூல வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், தற்போது இந்தப் படம் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் ‘கருடன்’ வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷூட்டிங் முடிந்தும் வீட்டிற்கு போகாத விஜய்..! என்ன காரணம் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here