இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சமுத்திரக்கனி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூரி தற்போது இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரியுடன் சேர்ந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் சமுத்திரக்கனி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டிரெண்டிங் நம்பர் 1-ல் ‘அன்னபூரணி’..! ஹாப்பியில் நயன்தாரா..!