அடேங்கப்பா இத்தனை கோடி சம்பளமா?.. சூரியுடன் போட்டி போடும் இளம் நடிகர்கள்..!

0
76

Actor Soori: தமிழ் சினிமாவின் காமெடி நட்சத்திரமாக கொடி கட்டி பறந்தவர் சூரி. அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் காமெடியான நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘கருடன்’, ‘கொட்டாகாளி’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இதனால், அடுத்தடுத்த படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ஏத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தனது அடுத்தடுத்த படங்களுக்கு சூரி ரூ.8 கோடி சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நெட்டிசன்கள், நடிகர் சூரி பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார், கஷ்டப்பட்டு சினிமாவில் கதாநாயகனாக மாறியிருக்கிறார்.

இதனால், அவர் கேட்கும் சம்பளம் நியாயமானது தான் என கூறுகின்றனர். ஆனால், தற்போது சினிமாவில் நுழைந்து இரண்டு படங்களில் மட்டும் நடித்துவிட்டு மணிகண்டன், கவின், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் தங்களது சம்பளத்தை உயர்த்துவது தான் நியாயமே இல்லை என கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here