மலையாள நடிகர் சுஜித் உயிரிழப்பு.. திரைத்துறையினர் இரங்கல்..

0
97

Actor sujith Passed away: மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவந்த அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

துபாயில் பிறந்த நடிகர் சுஜித், அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திரைத்துறையின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தால் கேரளாவிற்கு வந்து சினிமாவில் நுழைந்தார். 2018ஆம் ஆண்டு வெளிவந்த ‘கினாவல்லி’ படத்தின் மூலம் நடிகரானார்.

நடிப்பு, பாடுவது, நடனமாடுவது உள்ளிட்டவற்றில் சிறந்தவர். அந்த வகையில், ‘கினாவல்லி’ படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது சாலை விபத்தில் சுஜித் உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here