‘கங்குவா’ அப்டேட்.. மாஸ் லுக்கில் சூர்யா..! படக்குழு வெளியிட்ட புகைப்படம்..!

0
95

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நடிகர் சூர்யாவின் புதிய புகைப்படத்தை தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், மாஸாக உட்கார்ந்திருக்கும் சூர்யாவின் ஹேர் ஸ்டைல் மற்றும் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் பீர் குடிக்கும் அசோக் செல்வன்..! வைரலாகும் வீடியோ..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here