‘Neerathikaram’: பென்னி குயிக் கட்டிய அணையின் பெருமையைப் பேசும் விதமாகவும், அவரது தியாகத்தையும் சிறப்பையும் முன்வைக்கு விதமாக எழுதப்பட்டிருப்பது ‘நீரதிகாரம்’ நாவல்.
இந்த நிலையில், நாவலின் ஆசிரியர் அ. வெண்ணிலா இந்த நீரதிகாரம் நாவலை நேற்று நடிகர் சூர்யாவிடம் கொடுத்து, கையளித்துவிட்டு, சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக சூர்யாவுடன் அவர் உரையாடியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யா இந்த நாவல் குறித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீரதிகாரம் நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரியாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, அரபிக் கடலில் சென்று சேரும் இடம் வரை; கம்பம் பள்ளத்தாக்கின் செழிப்பிற்கு காரணமாக இருப்பது முல்லைப் பெரியார் அணை.
இந்த அணைக்கட்டு முதல், அணைக்கட்டை நிர்மாணித்த பென்னி குயிக்-ன் லண்டன் மாநகர் வரை களப்பயணம் செய்து சங்கத் தமிழ் தழைத்த மதுரை வரலாற்றுடன் இணைந்த முல்லைப் பெரியார் அணையின் 130 ஆண்டு பயணத்தை சுவாரசியமாக விவரித்துள்ளார்.. வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.