‘Anjaan’: இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அஞ்சான்’. இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸான நிலையில், மீண்டும் ‘அஞ்சான்’ படத்தை ரீரிலீஸ் தேதி படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்காக தற்போது ரீ எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இது குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இன்னும் ரீ ரிலீஸுக்கான தேதி வெளியாகாத நிலையில் படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.