ஜோதிகா நடிக்கும் ‘சைத்தான்’.. புரோமோஷனில் கலந்துகொண்ட சூர்யா..!

0
154

Surya Jyothika: ஹிந்தி இயக்குநர் விகாஸ் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா நடிக்கும் திரைப்படம் ‘சைத்தான்’. இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான சைத்தான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ‘சைத்தான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் மூலம் அஜய் தேவ்கன், ஜோதிகா ஆகியோர் கணவர் மனைவி என தெரிகிறது.

இந்த படத்தின் டைட்டிலில் குறிப்பிட்ட சைத்தான் கதாபாத்திரத்தில் மாதவன் மிரட்டலாக நடித்திருக்கிறார். இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த ‘சைத்தான்’ படம் நாளை (மார்ச் 8) ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் புரோமோஷன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அந்த வகையில், படத்தின் கதாநாயகியும் தனது மனைவியுமான ஜோதிகாவுடன் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டனர். அப்போது, இருவரும் ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here