தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. சமீபகாலமாக திரிஷாவை குறிவைத்து பல பிரச்சினைகள் சென்றுகொண்டிருக்கிறது. நடிகர் மன்சூர் அலிகானின் சர்ச்சைப் பேச்சுக்கு சினிமாதுறையினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது திரிஷா குறித்து அரசியல் பிரமுகர் ஒருவர் அவதூறாக பேசியிருக்கிறார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது ‘X’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களிடம் கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது.
அவதூறு பரப்பியவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்த பணிகளை எனது சட்ட வல்லுநர்கள் மேற்கொள்ளுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.