ராமேஸ்வரத்தில் ‘தாய்க்கு மோட்ச தீபம் ஏற்றிய வடிவேலு’..!

0
79

Actor Vadivelu: நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காலமானார். இறந்தவர்களுக்கு ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பதும், மோட்ச தீபம் ஏற்றுவதும் ஐதீகம். அதன்படி தனது தாய்க்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக வடிவேலு ராமேஸ்வரம் சென்றார்.

ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்துவிட்டு, தனது தாயிற்காக மோட்ச தீபம் ஏற்றினார். பின்னர், வெளியில் வந்த வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் தாயிற்காக மோட்ச தீபம் ஏற்றுவதற்காக உலகப் பிரசித்திப் பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு மகனாக தாய்க்கு செய்ய வேண்டிய கடமை இது’ என்றார். பின்னர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பியபோது ‘அவ்வளவுதான்’ என ஒரே வார்த்தையில் பதிலளித்துச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here