‘எதிர்நீச்சல்’ குழுவுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்..!

0
95

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘எதிர்நீச்சல்’ தொடர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த தொடரில் முன்னதாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த கதாபாத்திரல் யார் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ‘எதிர்நீச்சல்’ தொடரின் மிக முக்கிய தூணாக இருந்தவர் மாரிமுத்து அவரது பேச்சு, கம்பீரம் போன்ற மிடுக்கான கதாபாத்திரம் யாருக்கு பொருந்தும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் கதாபாத்திரத்தில்வெள்ளித்திரை நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சி தொடரில் டிஆர்பி குறையாத ஒரே தொடர் ‘எதிர்நீச்சல்’ தொடர் தான். அந்த அளவிற்கு இந்த தொடரின் கதை மக்களிடம் ரீச் ஆகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி.1ஆம்) நடிகர் வேல ராமமூர்த்தி தனது பிறந்த நாளை ‘எதிர்நீச்சல்’ தொடர் குழுவுடன் சேர்ந்து கொண்டாடினார். அவர்களுக்கு, எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்,

இந்த புகைப்படங்களை தொடரின் குழுவும், தொடரில் நடிக்கும் நடிகைகளும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பெரிய மாலையுடன் இருக்கு வேல ராமமூர்த்தி அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here