Vijay Antony: திருச்சியில் தனது கான்செர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் வாக்கு தான். 5 வருடங்களுக்கு ஒரு முறை நமக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை இந்த நோட்டாவுக்கு வாக்களிப்பது தேவையற்றது. அனைவரும் நோட்டாவுக்கு வாக்களித்துவிட்டால் பிறகு யாரை நாம் பிரதமராக தேர்ந்தெடுப்பது?. தேர்தலில் போட்டியிடுபவர்களில் சிறந்தவராக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களியுங்கள்.
பொதுவாக 65 முதல் 67 விழுக்காடு பேர் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர். குறைந்தபட்சம் 90 முதல் 95 விழுக்காடு மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும். இப்போது வாக்களிக்காமல் இருந்துவிட்டால் பிறகு நாம் தான் வருத்தப்படுவோம்” என்றார்.